மேலும் செய்திகள்
தனியார் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு
23-Jul-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே, டான்டீ தேயிலை தோட்ட குடியிருப்பு வாசலில் யானை தாக்கி பலியான மூதாட்டியின் குடுப்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ சரக எண்-4-ஐ சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி,65. எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் குடியிருந்து வரும் இவர், நேற்று முன்தினம் காலை, 7:00 -மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்த போது, யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன், வனச்சரகர்கள் ரவி, அய்யனார், வனவர் சுதீர்குமார் உள்ளிட்டோர் வந்து, மூதாட்டி உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மக்கள் சாலை மறியல் இந்நிலையில், ' யானை மற்றும் வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில், கொளப்பள்ளி பஜாரில், காலை, 9:30 மணி முதல் மறியல் போராட்டம் நடந்தது. வியாபாரிகளும் கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோரிடம், தாசில்தார் சிராஜூநிஷா, 'டான்டீ' கோட்ட மேலாளர் சிவகுமார், டி.எஸ்.பி. ஜெயபாலன், வனச்சரகர்கள் ஆர்.ரவி, அய்யனார், ரவி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ' சமீப காலத்தில் பிதர்காடு, தேவர் சோலை பகுதியில் இரண்டு பேர் யானைத் தாக்கி உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவது நபர் வீட்டு வாசலில் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இதனால், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; டான்டீ குடியிருப்பு பகுதிகளில் கழிப்பிடங்களை சீரமைத்து தரவேண்டும்,' என்றனர். 'மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, யானை தாக்கி உயிரிழந்த லட்சுமியின் கணவர் பரமசிவத்திடம், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, முன்னாள் நகர மன்ற தலைவர் காசிலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலையில், வனச்சரகர் ரவி, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 9.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். தொடர்ந்து, லட்சுமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.-
23-Jul-2025