உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை; அச்சத்தில் உள்ளூர் மக்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே, சேரம்பாடி சாலை ஓர வனப்பகுதியில், குட்டியுடன் யானைகள் முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளான சேரம்பாடி, சேரங்கோடு, எலியாஸ் கடை, கருத்தாடு, பிதர்காடு, நெலாக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. பகல் நேரங்களில் சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் யானைகள், இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கு வருவதுடன் சேதம் ஏற்படுத்துகின்றன. வனத்துறையினர் யானைகளை கண்காணித்து, வனப் பகுதிக்குள் துரத்தும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, சேரம்பாடி மின் வாரிய அலுவலகம் அருகே, சாலையோர வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் யானைகள் அருகே சென்று போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ