உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானையால் குடிசை சேதம்; பழங்குடியின கிராமத்தில் அச்சம்

யானையால் குடிசை சேதம்; பழங்குடியின கிராமத்தில் அச்சம்

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை, விலங்கூர் பழங்குடியின கிராமத்தில் யானையால் குடிசை சேதமானது.பந்தலுார் விலங்கூர் அருகே, குழிமூலா பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. கிராமத்திற்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வதால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த பகுதிக்கு வந்த யானை, சுரேஷ் என்பவரின் குடிசை வீட்டை சேதப்படுத்தியது. வீட்டினுள் இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை எடுத்து ருசித்துள்ளது. வீட்டிற்குள் படுத்திருந்தவர்கள் யானை வருவதை அறிந்து வெளியே ஓடி உயிர் தப்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியை வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். பழங்குடியினர் கூறுகையில், 'எங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் அரசின் தொகுப்பு வீடு கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை