மேலும் செய்திகள்
வீட்டு கதவை தட்டிய யானை; விரட்டிய வனக்குழுவினர்
26-Aug-2025
பந்தலுார்: பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில், பகல் நேரத்தில் சாலையில் சென்றவர் யானையிடம் இருந்து உயிர் தப்பினார். நெலாக்கோட்டை அருகே விலங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஷாத்,36. இவர், நேற்று காலை, 10:00 -மணிக்கு நெலாக்கோட்டை பகுதிக்கு வந்துவிட்டு, அவரின் ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையோர புதரிலிருந்து வந்த யானை இவரை தாக்க முற்பட்டுள்ளது. யானையை பார்த்த நவ்ஷாத் ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டு ஓடி உயிர் தப்பினார். யானை ஸ்கூட்டியை முழுமையாக சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் இருந்த வனச்சரகர் ரவி, வனவர் சுதீர் குமார் தலைமையிலான வனக்குழுவினர் அப்பகுதிக்கு வந்தனர். நவ்ஷாத் திடம் விசாரணை நடத்தினர். உடனடியாக அப்பகுதியில் இருந்த புதர்களை அகற்றப்பட்டன.
26-Aug-2025