உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நகருக்குள் நுழைந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்

நகருக்குள் நுழைந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்

கூடலுார்: கூடலுார் நகருக்குள் நுழைந்த காட்டு யானை, தேசிய நெடுஞ்சாலையில், 2 கி.மீ., துாரம் நடந்து சென்ற சம்பவத்தால் வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். கூடலுார், ராஜகோபாலபுரம் அருகே ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம், இரவு, 9:00 மணிக்கு, திடீரென நுழைந்த மக்னா யானை வாகனங்களுக்கு இடையே வேகமாக நடந்து சென்றது. அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து, வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். சிலர், சப்தமிட்டு யானையை விரட்டினர். தேசிய நெடுஞ்சாலை வழியாக இரண்டு கி.மீ., நடந்து சென்ற காட்டு யானை, வழியில் ஒரு காரின் கண்ணாடியை சேதப்படுத்தி, சில்வர் கிளவுட் வனச்சோதனை சாவடி அருகே, தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு சென்றது. வியாபாரிகள் கூறுகையில், 'வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிக்கு வந்து சென்ற காட்டு யானைகள், தற்போது நகருக்குள் நுழைந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, யானை நகருக்குள் நுழையாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !