உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வீட்டு வளாகத்தில் புகுந்த யானை; பாதுகாப்பு சுவர் சேதம்

வீட்டு வளாகத்தில் புகுந்த யானை; பாதுகாப்பு சுவர் சேதம்

பந்தலுார்; பந்தலுார் அருகே பெக்கி பகுதியில் வீட்டு வாசலுக்கு வந்த யானை, பாதுகாப்பு சுவரை இடித்து வெளியேறியது. பந்தலுார் அருகே பெக்கி குடியிருப்பு பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு யானை ஒன்று வந்துள்ளது. விவசாய தோட்டங்களில் விவசாய பயிர்களை, உணவாக்கி கொண்டு காலை ஐந்து மணிக்கு, பிரசாத் என்பவரின் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது. வீட்டின் முன் பகுதியில் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ள நிலையில், வீட்டு வளாகத்தில் இருந்து வெளியேற முடியாத யானை, பாதுகாப்பு சுவர் இடித்து அங்கிருந்து வெளியேறி உள்ளது. அதிகாலை நேரத்தில் சாலையில் யானை நடந்து வந்ததை பார்த்த, வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை திருப்பி கொண்டு சென்றனர். எனவே, யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை