உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கூட்டத்தை விட்டு பிரிந்த யானை தேயிலை தோட்டத்தில் தஞ்சம்

 கூட்டத்தை விட்டு பிரிந்த யானை தேயிலை தோட்டத்தில் தஞ்சம்

குன்னுார்: குன்னுாரில், கூட்டத்தை விட்டு பிரிந்த ஒற்றை யானை, வனப்பகுதிக்கு செல்லாமல் கோடேரி பகுதியில் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்னுார் அருகே கொலக்கம்பை பகுதியில், சில நாட்களுக்கு முன்பு, 7 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் கெத்தை வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அதில், இருந்து பிரிந்த கொம்பன் யானை கடந்த ஒரு வார காலமாக, கோடேரி, மானாடா, கிளன்கர்னே பகுதிகளில் முகாமிட்டு, வீடுகள் மற்றும் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளை உடைத்தது. தோட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. சாலையில் உலா வந்த யானையை குந்தா வனத்துறையினர் விரட்டினர். வனத்துறையினர் கூறுகையில்,'யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், நடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, வெளியே வராமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. யானை தனியாக பிரிந்து வந்த நிலையில் மக்களை பார்த்து யானை அச்சப்பட்டு செல்கிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை