மேலும் செய்திகள்
கார் மோதி புள்ளி மான் உயிரிழப்பு
10-Jun-2025
வயநாடு வனத்தில் உலா வரும் மாற்றுத்திறன் யானை
20-May-2025
பந்தலுார் : கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் காந்தன்பாரா நீர்வீழ்ச்சி உள்ளது. வயநாடு பகுதியில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நீர்வீழ்ச்சி பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நீர்வீழ்ச்சி தண்ணீரை ஒரு குட்டியுடன் இரண்டு யானைகள் கடக்க முற்பட்டது. தண்ணீரின் வேகம் அதிகரித்த நிலையில், யானைகள் தண்ணீரை கடக்க முடியாமல், சில மணி நேரங்கள் சிரமப்பட்டன. பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானைகள் பாதுகாப்பாக தண்ணீரை கடந்து செல்வதை கண்காணித்தனர்.பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மூன்று யானைகளும், தண்ணீரைக் கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்கு சென்றது. இந்த காட்சிகளை அப்பகுதியில் சென்ற சுற்றுலா பயணிகள் 'வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.மழையின் தீவிரம் குறைந்ததால், யானைகள் பாதிக்கப்படாமல் கரையை கடந்தது, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10-Jun-2025
20-May-2025