உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்

அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழையும் யானைகள்

கூடலுார்; 'முதுமலை வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள அகழியை, காட்டு யானைகள் சேதப்படுத்தி தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கூடலுார், தொரப்பள்ளி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க முதுமலை வனத்தை ஒட்டி அகழி அமைத்துள்ளனர். பராமரிப்பின்றி கிடந்ததால், காட்டு யானைகள் அகழியை கடந்து தொரப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த ஆண்டு அகழி சீரமைத்து, காட்டு யானைகள் நுழைவதை தடுத்தனர். விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மீண்டும் சில காட்டு யானைகள் இரவில் குணில் பகுதியில், அகழியை சேதப்படுத்தி அதன் வழியாக, தொரப்பள்ளிக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் விரட்டினாலும், அதன் வருகையை தடுக்க முடியவில்லை. பொதுமக்கள் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'முதுமலையிலிருந்து குணில் பகுதிக்கு காட்டு யானைகள் நுழைவதை தடுக்க அகழி அமைத்துள்ளனர். சில காட்டு யானைகள் அகழியை சேதப்படுத்தி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை செய்தப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அப்பகுதிகளை வனத்துறையினர் சீரமைப்பதுடன், சோலார் மின் வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை