உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரங்கள் பரவலாக வளர உதவும் யானைகள்

மரங்கள் பரவலாக வளர உதவும் யானைகள்

கூடலுார் : நீலகிரி வனப்பகுதியில் மரங்களின் விதை பரவல் நிகழ்வில் யானை லத்திக்கு முக்கிய பங்கு இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.கூடலுார், பந்தலுார் முதுமலை புலிகள் காப்பக்கம் பகுதியில் அதிகளவில் காட்டு யானைகள் உள்ளன. இவைகள் காடுகள், பல்லுயிர் கோர்வையை பாதுகாப்பதில் அதிக பங்கு வகித்து வருகின்றன. குறிப்பாக, மரங்கள் பரவல் நிகழ்வில் யானை லத்திக்கு (சாணம்) முக்கிய பங்கு உள்ளது.தாவர உண்ணியான யானைகளுக்கு, வனங்களில் கிடைக்கும் பழங்கள், தாவரங்கள் முக்கிய உணவாகும். இவைகள் உண்ணும் பழங்களின் விதைகள், வயிற்றில் தங்கி சாணம் வழியாக வெளியே வரும்போது, அவை அதிக வீரியமிக்க விதைகளாக மாறி அதிக அளவில் முளைக்கின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்கள் பரவலாக வளர காரணமாகிறது. மேலும் லத்தியில் உள்ள தாது உப்பு பூச்சிகளுக்கு உணவாக பயன்படுகிறது. சூடான லத்தி பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகள் அமர்ந்து குளிரை போக்க உதவுகின்றன. மேலும், லத்தி வனங்களுக்கு உரமாகவும் மாறிவிடுகிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி கூறுகையில்,''யானை லத்தியில் இருந்து கிடையும் வீரியமிக்க விதைகள், மூலம் பரவலாக மரங்கள் வளர்கின்றன. இதனால், வனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் யானை தனக்கு மட்டுமின்றி மற்ற வனவிலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்து, வருகிறது. யானைகள் இருக்கும் காடுகள் வளமாக இருக்கும். எனவே, யானைகளையும், அவைகளின வாழ்விடங்களையும் பாதுகாப்பது அவசியம். அதில், நீலகிரி வனங்கள் யானையால் வளமாக உள்ளன என்பதை அனைவரும் உணர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ