மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
கொடுமையை எதிர்த்து நில்... துாற்றுதல் ஒழி
10-Dec-2024
கோத்தகிரி; கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம்; குடிநீர் தேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மாநில அரசு சதுப்பு நில வாரியம் அமைத்து, மாநிலம் முழுவதும் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட சிறந்த சதுப்பு நில பகுதிகளை பாதுகாத்து வருகிறது. அதில், 'ராம்சார் சைட்' அங்கீகாரம் பெற்ற கோத்தகிரி 'லாங்வுட்' சோலையும்முக்கியத்துவம் பெறுகிறது. ஆக்கிரமிப்பு முயற்சி
இத்தகைய சிறப்பு வாய்ந்த, லாங்வுட் சோலை யின் அருகே, கோத்தகிரி நகரின் மைய பகுதியில், 7 ஏக்கரில் அமைந்துள்ள, 'ரைபிள் ரேஞ்ச்' சதுப்பு நிலம் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இங்கு,சமீப காலமாக வாகனங்கள் நிறுத்துவதும், வழிப்பாட்டு தலத்திற்காகவும் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது,இப்பகுதியில் சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற, அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கட்டுமானம் வருவதற்கு தடை விதித்து, சதுப்புநிலத்தை பாதுகாத்தார். 'இதன் ஒரு பகுதி, அரசு ஆவணங்களில் மைதானம் என்று உள்ளதை, 'சதுப்பு நிலம் 'என அறிவிக்க வேண்டும்,' என, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, 'இப்பகுதியை சதுப்பு நிலமாக அறிவிக்கும் செயல்முறைகள் நடந்து வருகிறது,' என, மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.உள்ளூர் மக்கள் கூறுகையில், ''இது போன்ற சதுப்பு நிலங்கள், நீர் மேலாண்மை, பல்லுயிர்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை சமன்படுத்துதல் போன்ற இயற்கை செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. தற்போது, இந்த சதுப்பு நிலம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது. முக்கியமான இப்பகுதியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். வனத்துறையினர் ஒப்படைக்க வேண்டும்
'லாங்வுட்' சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ கூறுகையில்,''கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த நீர் ஆதாரத்தை மாசுப்படுத்துகிறது. சதுப்பு நிலத்தை நில அளவை செய்து, வேலி அமைப்பதுடன், இங்குள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும். இப்பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நான்கு கிணறுகளை துார்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இங்கு, ஒரு பகுதி வேலி அமைத்து வாகனங்கள் நிறுத்தவும்; மற்றொரு பகுதியில் வரும் ஊற்று நீரை வழிமாற்றி விடுப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால், சதுப்பு நிலம் அழிந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சதுப்பு நிலத்தை, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இங்குள்ள பழைய பீர் தொழிற்சாலை கட்டடத்தை வாகனங்களில் நிறுத்துவதற்கான இடமாக மாற்றி, இந்த முக்கிய நீராதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
03-Dec-2024
10-Dec-2024