மேலும் செய்திகள்
கோவை-தன்பாத் ரயில்இன்று 8 மணி நேரம் தாமதம்
08-Apr-2025
குன்னுார், : குன்னுார் மலை ரயில் இன்ஜின் பழுது காரணமாக ஒன்றரை மணி நேரம் தாமதமானது.கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு நேற்று காலை, 7:10 மணியளவில், நான்கு பெட்டிகளில், 200 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. நீராவி இன்ஜின் பழுது காரணமாக, பல இடங்களிலும் நிறுத்தப்பட்டு, மிகவும் மெதுவாக இயக்கப்பட்டது.குன்னுார் 'லெவல் கிராசிங்' அருகே, மீண்டும் நின்றது. இதனால், குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை, 10:15 மணிக்குள் குன்னுார் வரவேண்டிய இந்த மலை ரயில், காலை, 11:45 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக குன்னூர் வந்து சேர்ந்தது. சுற்றுலா பயணிகள் சோர்வடைந்தனர். பிறகு, டீசல் இன்ஜின் இணைத்து, குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.
08-Apr-2025