உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சமத்துவ பொங்கல் விழா; சிலம்பாட்ட குழுவினர் அசத்தல்

சமத்துவ பொங்கல் விழா; சிலம்பாட்ட குழுவினர் அசத்தல்

குன்னுார்; குன்னுார் தி.மு.க., சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், தமிழக பாரம்பரிய வீர விளையாட்டு அனைவரையும் கவர்ந்தது.குன்னுார் வண்டிப்பேட்டை பார்க்கிங் தளத்தில், நகர தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மும்மதத்தினரின் பிரார்த்தனைகளை தொடர்ந்து, வண்ண கோலமிட்டு, மகளிர் சமத்துவ பொங்கல் வைத்தனர். விழாவிற்கு, மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். வஜ்ரம் சிலம்பாட்ட குழு சார்பில், மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம், புலியாட்டம், வாள்வீச்சு உட்பட பல்வேறு வீர சாகச விளையாட்டுக்கள் இடம் பெற்றன. மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை