அருவங்காட்டில் வெடிமருந்து மாதிரிகள் கண்காட்சி
குன்னுார்; குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில், தொழிற்சாலை எழுச்சி தின கொண்டாட்டம் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த தொழிற்சாலை முதன்மை பொது மேலாளர் விகாஷ் பூர்வார் தொழிற்சாலையின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கார்டைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் மருந்து மற்றும் அதன் தளவாட மாதிரி கண்காட்சி, சி.எப்.ஆர்.சி. ஹாலில் நடந்தது. இதில், தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.