சாலையில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலுார்: கூடலுார் மரப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலையில் அதிகாலையில் மரம் விழுந்ததால்,கேரளா - தமிழகம் இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலுார் கோழிக்கோடு சாலை மரப்பாலம் அருகே, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மரம் விழுந்தது. இதனால், கூடலுார்- ஊட்டி மற்றும் கேரளா இடையே இயக்கப்படும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று, சாலையில் விழுந்த மரத்தை அகற்றி காலை, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், நீலகிரி- கேரளா இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.