மேலும் செய்திகள்
காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்
10-Sep-2025
குன்னுார்; குன்னுார் கிடங்கு அருகே ஆரோக்கியபுரத்தில், கேரட் தோட்டத்தில் புகுந்த காட்டெருமை தாக்கியதில், விவசாயி படுகாயமடைந்தார். குன்னுார் கிடங்கு, ஆரோக்கியபுரம் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் தோட்ட பகுதிகளில் உணவு தேடி காட்டெருமைகள் வந்து செல்கிறது. இந்நிலையில், நேற்று காலையில் விவசாயி கார்த்திக்,30, என்பவரின் கேரட் தோட்டத்தில் காட்டெருமை புகுந்தது. சப்தம் எழுப்பி விரட்டிய போது, காட்டெருமை தாக்கி உள்ளது. அப்போது, இடுப்பின் கீழ் பகுதியில் படுகாயம் அடைந்த கார்த்திக், குன்னுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலின் பேரில், கட்டப்பெட்டு வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர், தோட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதுடன், விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக காட்டெருமைகள் அதிகரித்து இப்பகுதிக்கு வந்து தாக்கு கிறது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
10-Sep-2025