உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கரோலினா சாலையில் பள்ளம் விரிசல் ஏற்படுவதால் அச்சம்

கரோலினா சாலையில் பள்ளம் விரிசல் ஏற்படுவதால் அச்சம்

குன்னுார்,; குன்னுார் உபதலை ஊராட்சி கரோலினா, புதிய தடுப்பு சுவர் அருகே மண்ணரிப்பால் சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.குன்னுார் உபதலை ஊராட்சி, 5வது வார்டு கரோலினா மற்றும் புது காலனி பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையோர, வளைவில் கடந்த ஆண்டு மண்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கும் அபாயம் இருந்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ரூ. 14 லட்சம் மதிப்பில் சுவர் அமைத்தனர். எனினும், சாலை மற்றும் தடுப்பு சுவர் இடையே முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு நவ., மாத மழை பாதிப்பில், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், சீரமைப்பு பணிகள் துவங்கின. எனினும், முழுமையாக சீரமைக்கவில்லை. இதற்கு மக்கள், புகார்கள் அளித்த போது, ஊராட்சி நிர்வாகம், பெயரளவிற்கு பணிகள் மேற்கொண்டதுதொடர் மழையால், தடுப்பு சுவர் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை சிறிது சிறிதாக, விரிசல் ஏற்பட்டு வருகிறது. பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்பு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை