உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாதனை மாணவர்கள் பள்ளியில் பாராட்டு விழா

சாதனை மாணவர்கள் பள்ளியில் பாராட்டு விழா

பந்தலுார்: பந்தலுார் அருகே, தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். திருவள்ளுவர் படத்தை ஆயிரம் ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு தலைகீழாக வரைந்த மாணவி மதுஸ்ரீ உட்பட பல்வேறு சாதனைகளை புரிந்த, 15 மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி, சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற செய்த, பயிற்சியாளர் கிருஷ்ணகுமார் கவுரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., குணசேகரன், கூடலுார் அரசு கல்லுாரி முதல்வர் செல்வராஜ் உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ