/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அதிகாலையில் மரக்கடையில் தீ விபத்து; போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
அதிகாலையில் மரக்கடையில் தீ விபத்து; போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
குன்னுார்; குன்னுார் டி.டி.கே., சாலை, தனியார் டிம்பர் டிப்போவில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால்,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் டி.டி.கே., சாலையில், உள்ள தனியார் மரக்கடையில் நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் தீ ஏற்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், முன்னணி தீயணைப்பாளர்கள் முரளிதரன், முத்து, ராமச்சந்திரன் உட்பட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால், பெரியளவில் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மர துண்டுகள், பலகைகள், எரிந்து சேதமாகின. சரியான நேரத்தில் வந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்ளில் தீ பரவாமால் தடுக்கப்பட்டது,' என்றனர்.