புதர் செடிகளில் பரவிய தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் கூர்கா கேம்ப் பகுதியில் கடைகள் மற்றும் குடியிருப்பு அருகே புதர்செடிகளில் ஏற்பட்ட தீயை, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வனத்தீ பரவுவது வெகுவாக குறைந்தது. குன்னுாரில் கடந்த ஆண்டு, 132 இடங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறை அணைத்துள்ளனர். நடப்பாண்டு இதுவரை, 54 இடங்களில் தீ பரவியது தடுக்கப்பட்டது.