உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் ஐவர் கால்பந்து போட்டி; இரவு விளக்கொளியில் நடந்ததால் ரசிகர்கள் பரவசம்

ஊட்டியில் ஐவர் கால்பந்து போட்டி; இரவு விளக்கொளியில் நடந்ததால் ரசிகர்கள் பரவசம்

ஊட்டி : ஊட்டி காந்தளில் மூன்று நாட்கள் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில், திருச்சி அணி வெற்றி பெற்றது. ஊட்டி அருகே காந்தள் கால்பந்து மைதானத்தில், தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான, ஐவர் கால்பந்து போட்டி மூன்று நாட்கள் இரவு நேர விளக்கு ஒளியில் நடந்தது. அதில், 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில், திருச்சி அணி மற்றும் தஞ்சாவூர் அணிகள் மோதின. அதில், டைபிரேகர் முறையில், 4- 3 என்ற கோல் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு, 1.24 லட்சம் ரூபாய் பரிசு தொகை; இரண்டாமிடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு, 52 ஆயிரத்து 24 ரூபாய் பரிசு தொகை, கோப்பைகளும் வழங்கப்பட்டன.மூன்றாம் இடம் பிடித்த காந்தள் கால்பந்து அகடமிக்கும், நான்காமிடம் பிடித்த சென்னை அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. மூன்று நாட்களில் நடந்த போட்டியின் போது, கடும் குளிர் நிலவிய போதும், திரளான ரசிகர்கள் விளையாட்டை காண்டு பரவசம் அடைந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருகிணைப்பாளர்கள், பிரகாஷ்,ஸ்ரீ சரவணன், ஹரீஸ், சதீஷ், பாண்டியன் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை