உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கூடலுார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கூடலுார்: கூடலுார் பகுதிகளில், இரு வாரத்துக்கு முன் மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. பாண்டியார் - - புன்னம்புழா மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. 'ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் ஆபத்து உள்ளதால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம்' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும், கூடலுாரிலும், கேரளாவிலும் ஒரே நேரத்தில் பருவ மழை துவங்கி பெய்கிறது. பருவமழையின் போது கேரளாவிலும் தண்ணீர் தேவை இருக்காது. இதனால், கேரளா சாளியார் ஆற்றில் கலக்கும், பாண்டியார் - - புன்னம்புழா ஆற்று நீர் வீணாகிறது. மாயாறு, பாண்டியார்,- புன்னம்புழா ஆறுகளை இணைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி