உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்; வகுப்பு நடத்துவதில் சிக்கல்

பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்; வகுப்பு நடத்துவதில் சிக்கல்

குன்னுார் ; குன்னுர் பர்லியாரில் மழை வெள்ளம் புகுந்த ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுாரில் பெய்து வரும் கனமழையால் பர்லியார் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடப்பதால் தோண்டப்பட்ட இடங்களில் குவிந்த மண் கற்கள் அடித்து செல்லப்பட்டு, பர்லியார் குடியிருப்புகள் மற்றும் நடைபாதைகளில் குவிந்து கிடக்கிறது.இங்கு ஆய்வு மேற்கொண்ட கூடுதல் கலெக்டர் சங்கீதா, பள்ளி அருகில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்ட உத்தரவிட்டதை தொடர்ந்து தோட்டக்கலை துறை சார்பில் உடனடியாக, 2 காட்டு மரங்கள் உட்பட, 8 மரங்கள் வெட்டி அகற்றும் பணி துவங்கியது. இவற்றை அகற்ற, 4 நாட்கள் ஆகும்.மேலும், பள்ளி வகுப்பறைகளில் மழை நீர் மற்றும் சேறு அகற்றாமல் உள்ளதால் வகுப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில்,'இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை