மேலும் செய்திகள்
உணவு பாதுகாப்பு அலுவலர் மீன் கடைகளில் ஆய்வு
23-Dec-2024
கூடலுார்,; கூடலுாரில் வாங்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக, கடையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு செய்தார்.கூடலுார் நகரில் உள்ள பிரியாணி கடையில், கடந்த வாரம், பந்தலுார் பகுதியை சேர்ந்த, பெண் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கி சென்றார்.அதை உண்பதற்காக பிரித்த போது, சிக்கனில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அடுத்த நாள், பிரியாணி கடையில் நேரில் வந்து கேட்டுள்ளார். கடைக்காரர் அதனை மறுத்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவராஜ், கூடலுார் நகரில் உள்ள, பிரியாணி கடையில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, 'அந்த பிரியாணி தங்கள் கடை பிரியாணி என, இல்லை,' என, கடைக்காரர் தெரிவித்தார்.அலுவலர் சிவராஜ் கூறுகையில், ''கடையில் பணிபுரிபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்பான அறிக்கை, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் வழங்கப்படும். அறிக்கை வந்தவுடன் நடவிடக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
23-Dec-2024