மேலும் செய்திகள்
ஊட்டியில் நடைப்பாதையை மீட்டு தர மக்கள் கோரிக்கை
13-Nov-2024
ஊட்டி ; ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல், அரசு நிதி வீணாகி உள்ளது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, ஏ.டி.சி., பகுதியில், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் சென்று வர அதிக சிரமமாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஏ.டி.சி., பஸ் நிறுத்தம் மத்திய பஸ் நிலையம் இடையே, ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒட்டி, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நடந்த செல்ல ஏதுவாக, நடைப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால், நடைப்பாதையில் செடிகள் ஆக்கிரமித்தும், சாலையில் வாகனங்கள் நிறுத்துவதாலும், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு நிதி வீணாகியுள்ளது. மேலும், நடைபாதை ஓரம் திறந்த வெளி கழிப்பிடமாக மாறியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13-Nov-2024