உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டாம் சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம்; மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்

இரண்டாம் சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம்; மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம்

குன்னுார்: நீலகிரியில் இரண்டாவது சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வருகை அதிகரித்த நிலையில், மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நிலவும், 'குளு குளு' காலநிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வெப்பம் அதிகம் உள்ள கோடை சீசனை தவிர்த்து, இதமான காலநிலை நிலவும், தற்போதயை, 2வது சீசனில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது அதிகரித்துள்ளது. இவர்கள், 'யுனெஸ்கோ' அங்கீகரம் பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த மலை ரயிலில் இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். அங்கு குன்னுார் ரயில்வே பணிமனை, பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி இன்ஜின் மற்றும் புடைப்பு சிற்பமாக பல வண்ணங்களில் வரைந்துள்ள வனவிலங்குகள் முன்பு புகைப்படம் எடுத்தனர். மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நம் நாட்டிற்கு அதிகமாக வருவதன் முக்கிய காரணங்களில் ஒன்றாக, மலை ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிலக்கரியால் மலைப்பகுதியில் இயங்கும் இந்த யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயிலில் பயணம் செய்வதே விருப்பம் என்று கூறினர். ஆண்டுக்கு, 5,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலாவை ஊக்குவிக்க, ஊட்டி - ரன்னிமேடு வரை நிலக்கரியில் இயங்கும் இன்ஜினில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கினால் பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை