உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரங்கள் வெட்டிய நபர் மீது வனத்துறை வழக்கு பதிவு

மரங்கள் வெட்டிய நபர் மீது வனத்துறை வழக்கு பதிவு

பந்தலுார்,; பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் தனியார் தோட்டத்தில், மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. மேலும், பொக்லைன் பயன்படுத்தி மரங்களின் அடிபாகங்கள் தோண்டப்பட்டு, தோட்டப்பகுதி சமன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கடத்தியது போக மீதம் இருந்த மரத்துண்டுகளை சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் தலைமையிலான வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும், நிலத்தின் உரிமையாளர், சிபி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், இது குறித்த புகாரை மாவட்ட கமிட்டிக்கும் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !