மேலும் செய்திகள்
ராஜிவ் நினைவு தினம்; காங்கிரசார் அஞ்சலி
22-May-2025
கோத்தகிரி : கோத்தகிரி வட்டார காங்., சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் 33வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வட்டார தலைவர் சில்ல பாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர்கள் பில்லன், கமல சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில முதல்வர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜிவ் படத்திற்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.தொடர்ந்து, அமைதியை பேணி காக்கும் வகையில், தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
22-May-2025