உள்ளூர் செய்திகள்

நுாலக வார விழா

குன்னுார்; அருவங்காடு கிளை நுாலக வாசகர் வட்டம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், 57-வது தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பொது மேலாளர் நாயக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். வாசகர் வட்ட துணை தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நவீன உலகில் வாசிப்பின் முக்கியத்துவம், நுாலக பயன்பாடு குறித்து வலியுறுத்தப்பட்டது. விழாவில், துணை பொது மேலாளர்கள் விஜயகுமார், நவீன் ஜேம்ஸ், ராஜிவ் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். நுாலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை