உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கூடலுாரில் இலவச கண் சிகிச்சை முகாம்

கூடலுார் : கூடலுார் ரோட்டரி வேலி கிளப், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், ரோட்டரி கிளப் அலுவலகத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. தலைவர் ராபர்ட் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சத்யன் பாபு உறுப்பினர் எலிசபெத் மேரி முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில், 78 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 20 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை