இலவச மருத்துவ முகாம்; 55 வன ஊழியர்கள் பயன்
கூடலுார்; கூடலுார் நாடுகாணியில் நடந்த இலவச மருத்துவ முகாமில், 55 வன ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் தேவாலா, நாடுகாணி வன ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு, பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். முகாமை தேவாலா வனச்சரகர் சஞ்சீவ் துவங்கி வைத்தார். செஞ்சிலுவை சங்க டாக்டர் பாத்திலா தலைமையிலான மருத்துவ குழுவினர், வன ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். முகாமில், 55 வன ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். முகாமில், வனவர் சுரேஷ் குமார், ஜீன்புல் தாவர மைய காப்பாளர் கோமதி, நுகர்வோர் மைய நிர்வாகி ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.