அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
கூடலுார், ;கூடலுார் ஓவேலி காந்திநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளி, மாரியம்மன் கோவிலுக்கு 'ரெப்கோ' வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. கூடலுார் ஓவேலி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு, ரெப்கோ வங்கியின் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி காந்திநகரில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி சிவரஞ்சனி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். 'ரெப்கோ' வங்கி பேரவை பிரதிநிதி கலைச்செல்வன் பங்கேற்று, வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழ ங்கினார். நிகழ்ச்சியில், கூடலுார் கிளை மேலாளர் லோகநாதன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.