வாசகர்கள் கருத்துகள் ( 1 )
துறை அதிகாரிகள் இவ்வளவும் செய்யும் வரை குற்றவாளிகள் எங்கேயோ எஸ்கேப் ஆகியிருப்பார்கள்.
பந்தலுார் ; கூடலுார் வருவாய் மற்றும் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சேரம்பாடி அருகே கையுன்னி பகுதி அமைந்துள்ளது.இதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்ட நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேக்கு, ஈட்டி, அயனி பலா உள்ளிட்ட பட்டியல் வகை மரங்கள் அதிக அளவில் உள்ளது. இந்த மரங்களை வெட்ட வேண்டுமெனில், மாவட்ட கலெக்டர் தலைமையிலான கமிட்டியிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், கையுன்னி பகுதியில் தனியார் ஒருவர் நிலத்தில், அனுமதியின்றி, அயனிபலா, தேக்கு உள்ளிட்ட பட்டியல் வகை மரங்கள் வெட்டி கடத்தி செல்லப்பட்டது குறித்து, மாவட்ட கலெக்டர்; வனத்துறை அதிகாரிகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்பினர் புகார் அனுப்பி உள்ளனர்.அதில்,'இங்கு கடத்தப்பட்டது போக மீதம் உள்ள மரங்கள் துண்டுகளாக்கி அதே பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மரங்களின் எண்ணிக்கை தெரியாமல் இருக்கும் வகையில், பொக்லைன் மூலம் மரங்களின் அடிபாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளது. இங்கு அனுமதி இன்றி பொக்லைன் பயன்படுத்தி, மரங்களும் வெட்டி கடத்திய பின்னர் ஒரு சில மரங்களின் அடிபாகங்களில் மட்டும் வனத்துறை மூலம் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறப்பட்டுள்ளது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில்,''அப்பகுதியில் மரம் கடத்தப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டு, இதன் அறிக்கை பெறப்படும். அதன் பின்னர் நடவடிக்கை எடுக்க மாவட்ட கமிட்டிக்கு பரிந்துரைக்கப்படும். மரக்கடத்தல் கும்பல் மீது வனத்துறை மூலம் தனியாக வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.
துறை அதிகாரிகள் இவ்வளவும் செய்யும் வரை குற்றவாளிகள் எங்கேயோ எஸ்கேப் ஆகியிருப்பார்கள்.