அரசு பள்ளியை ஒட்டி குப்பை கழிவு மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்
ஊட்டி: அரசு மேல் நிலை பள்ளி அருகே கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ஏராளமான, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை ஒட்டிய நடைபாதை வழியாக நகராட்சி அலுவலகம், மார்க்கெட் பகுதிக்கு மக்கள் சென்று வருகின்றனர். பள்ளியை ஒட்டிய இடத்தில் திறந்தவெளியில் குப்பை கழிவுகள் வீசி எறியப்படுகிறது. திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்.