மேலும் செய்திகள்
ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்
03-Feb-2025
கூடலுார்; கூடலுாரில் பாலினம் சமத்துவத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.கூடலுாரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., செந்தில்குமார் துவக்கி வைத்தார்.ஊர்வலத்தில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பாலின சமத்துவத்தை பாதுகாப்போம்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஊர்வலம், ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறைவு பெற்றதுஇதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.டி.எம்.ஓ., ஐடியல், கலைவாணி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
03-Feb-2025