உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்கள் மோதல்; போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்: கூடலூர், ஓவேலி சாலை, பாரம் அருகே, அரசு பஸ்கள் மோதிய விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடலூரில் இருந்து, நேற்று முன்தினம், காலை அரசு பஸ், பயணிகளை ஏற்றி கொண்டு, ஓவேலி சாலை வழியாக பெரியசோலை நோக்கி சென்றது. பஸ்சை நவசாத் இயக்கினார். ஆரூட்டுப்பாறையில் இருந்து அதே வழிதடத்தில் அரசு பஸ் கூடலூர் நோக்கி வந்தது. பஸ்சை முனிஸ்வரன் ஓட்டி வந்தார். பாரம் அருகே வந்தபோது அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தது. விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !