உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு கல்லுாரி கேண்டீன் விரைவில் திறக்கப்படும்

அரசு கல்லுாரி கேண்டீன் விரைவில் திறக்கப்படும்

கூடலுார்; 'கூடலுார் அரசு கல்லுாரியில் ஒன்றரை ஆண்டுகளாக மூடி கிடக்கும், கேண்டீன்கள் விரைவில் திறக்கப்படும், என, முதல்வர் தெரிவித்தார்.கூடலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி, ஆமைக்குளம் மற்றும் கோழிபாலம் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லுாரி வளாகங்களில், கேண்டீன்கள் செயல்பட்டு வருகிறது.இதனை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தனர். ஒப்பந்தம் முடிந்த நிலையில், கடந்த ஒன்றை ஆண்டுகளாக, கேண்டீன்கள் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. இதனால், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் டீ குடிப்பது போன்ற தேவைகளுக்காக கல்லுாரிக்கு வெளியே சென்று வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனை பயன்படுத்தி, சமூகவிரோதிகள் சிலர், மாணவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் ஆபத்தும் உள்ளது. இதனை தவிர்க்க, 'கல்லுாரி வளாகத்தில் பூட்டி கிடக்கும் கேண்டீன்களை உடனே திறக்க வேண்டும்,' என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.கல்லுாரி முதல்வர் சுபாஷினி கூறுகையில், ''கேண்டீன் நடத்துவதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதனை எடுத்தவர்கள் நடத்த முன்வரவில்லை. இதனால், ஆவின் மூலம் கேண்டீன்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லுாரி வளாகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் மற்றும் தேவையான இடங்களில் கம்பி வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி