உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு மேல்நிலை பள்ளி வினாடி வினா போட்டி

அரசு மேல்நிலை பள்ளி வினாடி வினா போட்டி

ஊட்டி: ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், குன்னுார் கல்வி மாவட்ட அளவிலான, துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில், கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, யுனிக் பள்ளி, குன்னுார் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, கக்குச்சி கிரி ஈஸ்வரா மெட்ரிக் பள்ளி, மஞ்சூர் புனித அல்போன்சா ஆங்கிலப்பள்ளி, கீழ் கவ்வட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் வாயிலாக, வரும், 13ம் தேதி கூடலுாரில் நடக்க உள்ள, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை