உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு

யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கூடலுார்;கூடலுார் புனித தாமஸ் ஆங்கில பள்ளியில், யு.கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.கூடலுார் புனித தாமஸ் ஆங்கில பள்ளியில் யு.கே.ஜி., முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மெஷிஜெய்சன் வரவேற்றார். தாளாளர் அருட்தந்தை ஜோபி கோரத் தலைமை வகித்து பேசுகையில், ''பெற்றோர் தங்கள் குழந்தைகள் முதல் நாளில் பள்ளிக்கு விட்டு செல்கின்ற போது கவலை அடைந்து இருப்பர். இரண்டு ஆண்டுகளுக்கு பின், இன்று நடைபெறும் விழாவில் குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளனர்,''என்றார்.பள்ளி தாளாளர், ஜெரோசா, மழலையர் ஆரம்பபள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி அந்தோணியம்மாள் உட்பட பலர், 137 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். பள்ளி நிர்வாக குழுஉறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை