உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்

கோத்தகிரி; கோத்தகிரியில், 'பசுமைத் தமிழ்நாடு இயக்கம்' தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு பணி துவக்கப்பட்டது. மாநிலம் முழுவதும், பசுமை தமிழ்நாடு இயற்கை தினத்தை முன்னிட்டு, வனவளத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவாக, வனத்துறை சார்பில், அந்தந்த வனச்சரகங்களில் மரக்கன்றுகள் நடவு நிகழ்வு நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, 'லாங்வுட்' சோலை காப்பு காட்டில், மறுக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் மற்றும் கோத்தகிரி நகர மன்ற தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர், மரக்கன்றுகளை நடவு செய்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முதற்கட்டமாக, சோலை வளாகத்திற்குள், 50 நாவல் மரங்கள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில்,'கீஸ்டோன்' பவுண்டேஷன் தன்னார்வலர்கள் சந்திரசேகர் உட்பட வன பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !