மேலும் செய்திகள்
போக்சோ வழக்கு கைதிக்கு 'குண்டாஸ்'
08-Sep-2025
கூடலுார்: கூடலுார் அருகே, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள அரசு பழங்குடி அரசு பள்ளி மாணவிகளுக்கு, அப்பள்ளி ஆசிரியர் மாரியப்பன்,52, என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில், கூடலுார் அனைத்து மகளிர் போலீசார் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர். ஆக., 21ல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, நீலகிரி எஸ்.பி., நிஷா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, ஆசிரியரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். கூடலுார் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஊட்டி சிறையில் இருந்த அவரை, கோவை மத்திய சிறையில் ஒப்படைத்தார். அவரிடம், குண்டர் தடுப்பு சட்டத்திற்கான உத்தரவு நகலை வழங்கினார்.
08-Sep-2025