உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  போலீஸ்காரரை தாக்கிய தலைமையாசிரியர் கைது

 போலீஸ்காரரை தாக்கிய தலைமையாசிரியர் கைது

ஊட்டி: ஊட்டி சாலையில், போலீஸ்காரரை தாக்கிய, அரசு பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன், 57, என்பவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், மஞ்சூரைச் சேர்ந்த சீனிவாசன், கடநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றினார். நேற்று முன்தினம் மாலை, இவர் ஓட்டி வந்த கார், ஊட்டி கேசினோ சந்திப்பில், ஒரு வாகனத்தின் மீது உரசிவிட்டு, நிற்காமல் சென்றது. இதுகுறித்து, அப்பகுதியினர் அளித்த தகவலால், மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சீனிவாசனை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவரின் சட்டையை பிடித்து இழுத்த போலீஸ்காரரின் கன்னத்தில் சீனிவாசன் அறைந்துள்ளார். பதிலுக்கு, அந்த போலீஸ்காரர், சீனிவாசன் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவத்தை சிலர் 'வீடியோ' எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து, ஊட்டி பி1 போலீசார், இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, சீனிவாசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்