சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு; பழங்குடியின மக்களுக்கு அறிவுரை
பந்தலுார்; நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம், 'சைல்டு பண்ட்' அமைப்பு இணைந்து பழங்குடியின தாய்மார்களுக்கான விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், களப்பணியாளர் யோகேஸ்வரி வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா பேசுகையில்,''பழங்குடியின தாய்மார்கள் உரிய நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்வதுடன், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு பொருட்களையும் உட்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்புகளையும், சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்து கொள்வதால் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க முடியும். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் அவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர் நாட்டம் காட்டுவது போன்றவை முக்கியமாகும். கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க பழங்குடியின மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். சுகாதார பணியாளர் பைசல் பேசுகையில், ''தாய்மார்கள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளை நோய் தாக்காமல் இருக்க சுத்தமாக இருக்க வேண்டும்,''என்றார். களப்பணியாளர் நீலகண்டன் பேசுகையில், ''பழங்குடியின மக்கள் தங்கள் கிராமத்தின் குறைகள் குறித்து, அரசு அதிகாரிகளிடம் நேரில் தெரிவிக்க வேண்டும்.