உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடும் மேகமூட்டம்; வாகனங்கள் இயக்க சிரமம்

கடும் மேகமூட்டம்; வாகனங்கள் இயக்க சிரமம்

குன்னுார்: குன்னுாரில் மழையை தொடர்ந்து கடும் மேகமூட்டம் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் முகப்பு விளக்குகள் பயன்படுத்தி இயங்கி வருகின்றன. குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்தது. அதில்,மாவட்டத்தில் அதிகபட்சமாக எடப்பள்ளியில், 47 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. நேற்று பகலில், கடும் மேகமூட்டம் நிலவியதுடன், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டதுடன், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. முகப்பு விளக்குகளை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டன. குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்., அருகே மரம் விழுந்தது. குன்னுார் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். சாலை விரிவாக்கம் செய்த நிலையில், ஒருபுறமாக வாகனங்கள் சென்று வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட, கொலக்கம்பை சிக்கரசு கிராமத்தில் தோட்டத்தில் இருந்த மண் மழை நீரில் அடித்து வரப்பட்டு வீடுகளுக்குள் புகுந்து சேறும், சகதியமாக மாறியது. பொதுமக்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை