மேலும் செய்திகள்
கோவையை குளிர வைத்த மழை
05-Apr-2025
மஞ்சூர்; மஞ்சூரில் பெய்து வரும் மழையால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்தது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.இந்நிலையில், மஞ்சூர் அருகே கொட்டரக்கண்டியில், 5 அடி தடுப்பு சுவர் கனமழைக்கு இடிந்து அருகில் இருந்த குடியிருப்பு மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக குடியிருப்பு வாசிகள் தப்பினர். கன மழைக்கு, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி களில் ஆங்காங்கே சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இப்பகுதிகளில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
05-Apr-2025