உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி; கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், கொட்டி தீர்த்த கனமழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம், 3:00 மணியளவில், கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. இதனால், தேயிலை தோட்டங்கள் உட்பட, விவசாய நிலங்களில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. நீர்நிலைகளில், தண்ணீர் வரத்து உயர்ந்தது. குறிப்பாக, உரமிட்டு பராமரித்த தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை துளிர்விட்டு,மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில், கடந்த, இரு வாரமாக பசுந்தேயிலை விலை, குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'மத்திய மாநில அரசுகள், கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இடுபொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ