பந்தலுாரில் மனைவியை கொன்ற கணவன் கைது
பந்தலுார்; பந்தலுார் அருகே மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.பந்தலுார் அருகே வெட்டுவாடி, மடமூலா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் யசோதா,52. இவர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் சந்திரன் என்பவரை, மூன்றாவதாக திருமணம் செய்து அவருடன் வாழ்ந்துள்ளார்.கடந்த, 24ம் தேதி இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சந்திரன் கல்லால் தாக்கியதில் காயமடைந்த யசோதா உயிரிழந்தார். எருமாடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், யசோதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், தலைமறைவான சந்திரனை நேற்று கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.