மேலும் செய்திகள்
போதை மாத்திரை கடத்தியவர் கைது
28-Aug-2025
பாலக்காடு: பாலக்காடு அருகே, குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பாலக்கயம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரோபின், 26. இவரது மனைவி சில்பா, 24. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இரண்டு வயதில் மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ரோபின், வீட்டில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இதில், கோபமடைந்து சில்பா கடந்த 10ம் தேதி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வராமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சில்பாவின் தாய் வீட்டிற்கு சென்ற ரோபின், -சில்பா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரோபின், தன் கையில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து, சில்பாவை சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த சில்பாவை அப்பகுதி மக்கள், பெரிந்தல்மண்ணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவத்திற்குப்பிறகு, கல்லடிக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த ரோபினை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த ரோபினை சிறையில் அடைத்தனர்.
28-Aug-2025