உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்

நான் டாடா பிர்லா இல்லை பெண்களிடம் எம்.பி., ராஜா பாய்ச்சல்

அன்னுார்: 'நான் டாடா, பிர்லா இல்லை,' என நீலகிரி எம்.பி., ராஜா, இலவச வீடு கேட்ட பெண்களிடம் ஆவேசமாக பதில் அளித்தார். இதனால், மனு கொடுக்க வந்த அப்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க நீலகிரி எம்.பி., ராஜா, நேற்று வந்தார். அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், சொக்கம்பாளையம் மற்றும் செல்லனுர் காலனியைச் சேர்ந்த பெண்கள், 'எங்களது வீடுகள் 1989ல் கட்டப்பட்டது. 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து உள்ளன. உடனே வேறு வீடு கட்டித் தர வேண்டும்,' என்றனர்.உடனே, அன்னூர் தாசில்தாரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கும் படி ராஜா கூறினார்.அதன் பிறகும், பெண்கள், 'எங்களுக்கு கண்டிப்பாக வீடு மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டும்,' என்றனர்.இதனால் எரிச்சலடைந்த ராஜா, ''நான் டாட்டா, பிர்லா இல்லை. உங்களை போல நானும் சாதாரணமானவன் தான். எனவே திரும்பத் திரும்ப இது குறித்து பேசாதீர்கள்,'' என்றார்.ராஜாவின் பதிலால், வீடு கட்டித்தரக் கேட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.mohanraj raj
பிப் 18, 2025 21:41

எந்த டாட்டா பிர்லா ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழல் செய்தார் ஏன் அவர் பெயரை கெடுக்கிறாய்


ராமகிருஷ்ணன்
பிப் 18, 2025 12:35

டாடாவும் பிர்லாவும் தொழில்களை செய்து சம்பாதிக்கின்றனர். நீ திமுக அரசின் மூலமாக ஊழல்கள், கமிஷன் செய்து சம்பாதிகிறாய், அரசியல் திருடன் நீஎப்படி தொழில் அதிபன் ஆவாய், என்ன ஒப்பீடு இது, டாடா, பிர்லாவை கேவலமாக திட்டினாய் என்று உன் மேல் வழக்கு போட வேண்டும்.


ஐஸ்வர்குமார்
பிப் 18, 2025 11:14

டாட்டாவும், பிர்லாவும் யாருக்கு இலவச வீடு குடுக்கறான்?


Prasanna Krishnan R
பிப் 18, 2025 09:43

நீங்க டேவிட் பிள்ளை. டாட்டா மகன் இல்ல.