உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விதிமீறி கட்டப்பட்ட கட்டடம் இரண்டாம் முறையாக சீல்

விதிமீறி கட்டப்பட்ட கட்டடம் இரண்டாம் முறையாக சீல்

ஊட்டி : 'பிளான் அப்ரூவல்' வாங்காமல் பின்பக்க கதவு வழியாக செயல்பட்ட கட்டடத்திற்கு இரண்டாம் முறையாக 'சீல்' வைக்கப்பட்டது. ஊட்டி, தேனிலவு படகு இல்லம் சாலையில், 'பிளான் அப்ரூவல்' வாங்காமல் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, 2019ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் 'சீல்' வைத்தது. அந்த கட்டடத்தில், பின்பக்கம் கதவு வழியாக சென்று பலர் தங்கி வருவதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில், நகராட்சி ஊழியர்கள், வருவாய் துறையினர்,போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நேற்று மாலை, 'சீல்' வைத்தனர். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,''பிளான் அப்ரூவல் வாங்காததால், 2019ம் ஆண்டு நகராட்சி சார்பில்,'ரெடிஷன்' என்ற தனியார்குழும கட்டடத்திற்கு 'சீல்'வைக்கப்பட்டது. தற்போது,பின்பக்க கதவு வழியாகசென்று சிலர் தங்கி வருவதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில்,'சீல்' உடைக்கப்பட்டது தெரியவந்தது. நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கட்டடத்திற்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை